Friday, April 11, 2014

ஏலகிரி பயணம்



தென்ஆப்ரிக்காவில் ஒரு வருடம் இருந்துட்டு எப்போடா ஊருக்கு போவோம்னு wait பண்ணி , பயங்கர plan எல்லாம் போட்டு ஒரு இருபது நாள் லீவ் எடுத்துட்டு வந்துட்டேன்.
Flight ஏறுறதுக்கு முன்னாடியே இந்த வருஷம் எங்க டூர்  போக வேண்டும் என்று மக்கள் கூட பேசி முடிவு பண்ணிட்டோம்.நான் அருவி குளியலுக்கு ஆசைப்பட்டு "Tada falls " போகலாமே என்று கதறி பார்த்தேன். பெங்களூரில் இருந்து சகல ஓகே சொன்னாலும், மணி சார் பிடிவாதமா ரெண்டு நாள் ட்ரிப் வேண்டும் என்று தலைகீழா நின்னுட்டார். அவன் சொன்னதும் சரி தான்.இந்த ட்ரிப்பே  கொண்டு வந்த tacquela வ காலியாக்றதுக்குத்தான். கார் owner  அவன் தான் , அதனால tacquela +hangover +travel +driving+ first long trip with new car (petrol amount  shared)++++ எல்லாம் calculate பண்ணி தான் அவன் ரெண்டு நாள் trip பிளான் சொன்னது.
2011 , 2012 ல கோவா போனதுனால நெய்தல் நிலம் வேண்டாம் என்று மக்கள் சொல்லிட்டாங்க.இந்த முறை மலை என்று தீர்மானம் ஆச்சு. மணி சார், ஊட்டி,கொடைக்கானல் option சொன்னதுமே எல்லோரும் ஒரே டைம்ல நோ சொல்லிட்டோம்.அப்போ அவர்க்கு தோணியது தான் ,ஏலகிரி.அவன் சொல்ல நெனச்சது ஏற்காடு.Type பண்ணுனது ஏலகிரி.மணி சார் விரல்ல சனி வந்து இருந்தது யாருக்குமே தெரியாது.
பெங்களூர் சகல வேற உடனயே கூகிள் map ல நோண்டி அது பெங்களூர் பக்கத்துல தான்னு confirm பண்ணிட்டார். மனசே இல்லாம நானும் ஓகே சொல்ல , ஏலகிரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நானும் மணி சாரும் குருஜியும் சென்னை-வேலூர்-ஏலகிரி , சகல பெங்களூர்- ஏலகிரி நு பிளான் பண்ணிட்டோம். கடலூர் சந்துரு வழில திண்டுக்கல்ல ஏறிக்கறேன்னு சொன்னதும் ,எங்களால பேசவே முடியல. (சென்னை – ஏலகிரி -200கிமீ, சென்னை –திண்டுக்கல்-ஏலகிரி-600கிமீ). அதெப்படி அவனால மட்டும் இது மாதிரி யோசிக்க முடிஞ்சுது??
ஒரு வழியா குருஜி officeல attendance போட்டுட்டு , சைதாபேட்டைல  இருந்து ஒரு 9 மணிக்கு கெளம்புனோம். வண்டில மூணு பேரு, டிரைவர் மணி, குருஜி, நான். சோளிங்கர் வந்ததும் மணி சார், டிவிஎஸ் ல “உள்ளேன் ஐயா” சொல்லிட்டு வந்தார். அப்படியே , சோளிங்கர்ல ஒரு 'adipoli ' ஹோட்டல் கூட்டிட்டு போனார்.பிரியாணி சுமாரா  இருந்துச்சு.அந்த சூப்பர் ஹோட்டல் தான் டூர் முடிஞ்சதும் எல்லார்க்கும் வயித்தவலிக்கு காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம்.மூணு மணிக்கு,  திண்டுக்கல் வரேன்னு சொன்ன சந்துருவ வேலூர் ல pick பண்ணிட்டோம்.:-)
நாங்க spot அ நெருங்க நெருங்க சூரியன் சுட்டெரிச்சு கிட்டு இருந்துச்சு.
Already  மலை ஏறிட்ட சகலைக்கு போன் பண்ணினோம். சகல climate  எப்படி ன்னு கேட்டதும் பொங்கிட்டாரு.Unbelievable  னு சொன்னாரு.மணி வேற sweater கொண்டு வரல நு பயந்து கிட்டே இருந்தான்.அவ்வுளவு குளிரானு கேட்டதுக்கு, சகல "சட்டய கழத்திட்டு இருக்கேன், சூடு தாங்க முடியல" என்று சொன்னார். Welcome to  Elagiri.
மலை ஏறுறதுக்கு முன்னாடி ஒரு கடைல பெப்சி வாங்க நிறுத்தி விசாரிச்சோம். நாங்க நாகர்கோயில்னு சொன்னதும் அவர் குடுத்த reaction எப்படி இருந்துச்சுன்னா , "டேய் நீங்க எதுக்கு ஏலகிரி வரறீங்க? உங்களுக்கு கிறுக்கு புடிச்சிருச்சா??? " இந்த ராமநாதபுரம்,வேலூர்,சென்னை, ராஜஸ்தான்,சோமாலியா போன்ற பாலை நில மக்கள் மட்டுமே வந்து என்ஜாய் பண்ற ஒரு இடம் போல.
போற வழில ஒரு "view point "னு போர்டு பாத்தோம்.கார் ல இருந்து இறங்க தோண வில்லை. அடிச்ச வெயிலுக்கு.வரும்போது பாத்துக்கலாம்னு  விட்டோம். மலை உச்சி (?) ல போனது அங்க 'சகல' , கோவா costume ல இருந்தார்.Sleeve less tshirt உம் பெர்முடாசும். கார் ல இருந்து இறங்குறதுக்கு முன்னாடியே சூடு எவ்வுளவு இருக்கும்னு guess  பண்ண முடிஞ்சுது. நாகர்கோயில் ல சித்திரை ல கூட இந்த புழுக்கம் இருக்காது.

அடுத்து எங்க hotelக்கு போனோம். நல்ல மேனேஜர். சிறப்பா கவனிச்சுடலாம்  என்று  சொல்லிட்டே இருந்தார்.டபுள் பெட்ரூம் ரூம ஏதோ வசந்த மாளிகைய சுத்தி காட்டுற மாதிரி காமிச்சுட்டு இருந்தத கூட மன்னித்து விடலாம்.ஆனா, மனசாட்சியே இல்லாம bathroom  ல ஹீட்டர் எப்படி on பண்றதுனு  ஸ்பெஷலா சொல்லிட்டு போனார். வாய் வரைக்கும் வந்துருச்சு.ஹீட்டர் எதுக்குனு கேட்டு அவர் மனச கஷ்டப்படுத்த விரும்பல.பொழச்சு போகட்டும்.
அடுத்து ஏலகிரி attractions என்ன என்னனு தலைவர் கிட்ட கேட்டோம்.View point , lake , park னு சொன்னாரு. View பாயிண்ட் நாளைக்கு மலை இறங்கும் போது  பாக்கலாம்னு பிளான் பண்ணிடதால பார்க் எவ்ளோ கிலோமீட்டர் சார் னு கேட்டோம். எல்லாமே ஹோட்டல் ல இருந்து walkable distanceனு அவர் சிரிக்காம சொன்னதுனால ஒரு doubtum வரல. 'Walkable  distance ' கேட்டதும் சகல மூஞ்சில ஒரு பெருமிதம்.ஏன்னா , ரூம புக் பண்ணுனது அவரு. ஹோடல்கார் ,பார்க் 8 மணிக்கு லைட் ஷோ உண்டுனு சொல்லவும் , சகல "Y cant we open the bottle ?"  nu கேக்கவும் சரியா இருந்துச்சு.ஹோட்டல் கார் சொன்னது 5 ல நாலு பேரு காதுல விழவே இல்ல.
dinner ellam ஹோட்டல்காரர் சிறப்பா செஞ்சு வைக்கறேன்னு வேற சொல்லிருந்தார். ஒரு சின்ன ரௌண்ட்க்கு அப்புறம் 8 மணிக்கு ரௌண்ட்ஸ் போகலாம்னு வெளிய வந்தா, அதே புழுக்கம். 8 மணினா  நைட் 8 மணியே தான்.நல்ல வேளை, பார்க் பூட்டிட்டான்.We were not prepared for the next disappointment . ஒரு வேளை பார்க்கும் மொக்கையா இருந்துச்சுனா அதை தாங்குற மன தைரியம் எங்களுக்கு இல்லை.

நைட் தெரியாத ஊர்ல சுத்தி தொலைய வேண்டாம் னு room க்கு வந்துட்டோம். அப்போது எங்களுக்கு தெரியாது மொத்த ஊரே ரெண்டு தெரு தான். எங்க தொலைஞ்சாலும் அந்த ஹோட்டல் வாசல்ல தான் தொலையணும் என்று. ஹோட்டல்காரர்  கொண்டு வந்த பரோட்டா, சப்பாத்தி,oneside omlette எல்லாம் சாப்பிட்டு விட்டு, நான் சீக்கிரமா தூங்கி விட்டேன். சகலயும் மணி சாரும் தூங்க எப்படியும் late  ஆகிருக்கும்.
அடுத்த நாள் காலைல தான் அந்த planned கூட்டு களவாணி  தனத்த பார்த்தோம். Tea கடைக்காரர் , Tea குடிக்கிறவர் , ஆட்டோ டிரைவர்னு  எல்லோரும் monkey குல்லா போட்ருந்தாங்க.lake side ல ஒரு பொண்ணு ஆடு மேய்ச்சுட்டு இருந்தா. என்ன ஆச்சர்யம்!!! அவ தலைலயும் குல்லா.அத கூட தாங்கிக்கலாம். அந்த ஆடுங்க எல்லாம் செம்மறி ஆடுங்க.ஒரிஜினல் செம்மறி இல்லாட்டாலும் normal  ஆடு இல்ல.Sweater போட்டது போல முடி.இந்த குல்லா , செம்மறி ஆடு இதெல்லாம் இந்த ஊர் மக்கள் உருவாக்கிகிட்டதாகவே தோணுது. இல்ல goverment  எதாவது பிளான் போட்டு பண்ணிருகாங்களா nu தெரியல.
ஹோட்டல்க்கு வந்ததும், தலைவர் நல்ல சுத்தி பாத்தீங்களா தம்பினு கேட்டார். ஆமா சார் , ரெண்டு தெருவையும் நல்லா சுத்தி பாத்துட்டோம்.அடுத்தமுறை வரும் போது , ஒரு ரெண்டு மூணு நாள் இருந்து சுத்தி பாக்குறோம் சார் என்று சொல்லி விட்டோம்.
“இங்க ஒரு நல்ல massage parlour இருக்கு” அப்படினு ஒரு கொக்கிய போட்டார்.ஒரு மீனுக்கும் சிக்குற mood இல்லை. உங்கள் சேவைக்கு நன்றி என்று சொல்லி , காசு settle  பண்ணிட்டு , மலை இறங்க ஆரம்பிச்சுட்டோம். நல்ல வேளை, அந்த view point இல் நிறுத்த வில்லை.
மொத்தத்தில் ஏலகிரி  டிரிப் Unforgettable … J

1 comment:

  1. Funny to read this now.. andha rendu moonu naal trip organize panidalama ;)

    ReplyDelete