ஒரு வழியா IPL தொடங்கியாச்சு. ரெண்டு
மாசத்துக்கு ,சென்னை டா! தோனி டா! என்று மக்கள் உணர்ச்சிவசப்பட்டுகிட்டு இருப்பாங்க.
ஊர் பாசத்த ஓரங்கட்டி வச்சிட்டு , யாருக்கு ஜெயிக்கிற வாய்ப்பு பிரகாசமா இருக்குனு
பார்க்கலாம்.
8.Kolkata Knight Riders
இந்த முறை புனே இல்லாததால , 8 வது இடத்துக்கு
No competition.தோக்கிறதுக்காகவே அளவெடுத்து செஞ்ச team.
58 ball க்கு 40 ரன் எடுக்கிற காலிஸ், 3 ball க்கு மேல
நிக்காத யுசுஃப் பதான், குழந்த ப்யுஷ் சவ்லா, உறியடி உலகநாதன் வினய் குமார் இப்படி
எல்லாரும் தத்தி பசங்க.
ஷாருக் , மேட்ச் பாக்க வராம இருக்குறது நல்லது.
7. Sunrisers
நாங்க 120 ரன்னுக்கு மேல அடிச்சா, எங்க சட்டைய பிடிச்சு கேளுங்க. உருண்டு
பிரண்டு 140 ரன் அடிச்சாலே, இவிங்க ஜெயிச்ச மாதிரி தான்.வேணு கோபால் ராவ்- எங்கயோ
கேட்டது போல இருக்குதா? தாத்தா இந்த டீம் ல தான் விளையாடுராப்ல.
6. Delhi Daredevils
தினேஷ் கார்த்திக்க 12 லட்ச ரூபா குடுத்து வாங்குன பெரிய மனுசங்க. இதுல
தலைவர் CAPTAIN வேற. பீட்டர்சன் விளையாடினா 5th place கிடைக்க
வாய்ப்பு இருக்கு. டுமினி, ஷமி,டெய்லர் இப்படி டீம் நல்லா தான் இருக்கு.
ஆனா மேட்ச்க்கு ஒருத்தர் நல்லா விளையாடுறதே பெரிய
விஷயம் தான்.
5. Mumbai Indians
யார் கண்ணு பட்டுச்சோ , இந்த ipl ல அதிகமா
ஃபீல் பண்ணுறது இவுங்க தான். வேண்டாம் என்று தூக்கிப்போட்ட “பிஜிலி” வெடி Maxwell, இந்த வெடி வெடிக்கும் என்று கனவுல கூட யோசிச்சிருக்க மாட்டாங்க. நம்ம CORIANDER
SON பாவம், பயபுள்ள
வந்தாலே ஸ்பின்ன போட்டு கோழிய அமுக்கிற மாதிரி அமுக்கிடறாங்க. இருந்தாலும் நம்ம
ரோஹித் ஷர்மாவுக்காக 5வது இடம்.
4. Rajasthan Royals
ஃபீல் குட் படம் அப்படி சொல்றது மாதிரி, இது
ஒரு ஃபீல் குட் டீம். வாட்சன், ஹாட்ஜ்,ஃபௌல்க்னெர் – மினி
ஆஸ்திரேலியா டீம் இருக்கு. சாம்சன், ராஹானே போல இள ரத்தங்கள் வேற. Semi Final
வரைக்கும் வர எல்லாத் தகுதியும் உள்ள டீம். ஆனாலும் சாம்சன் சிக்ஸ் அடிக்கும் போதெல்லாம் 19 வயசுனு சொல்றதும், தாம்பே விக்கெட்
எடுக்கும் போதெல்லாம் 41 வயசுனு சொல்றதும் கடுப்பாதான் இருக்கு.
3. Chennai Super Kings
நெஹ்ரா டீம் ல இருக்கிறதால இவ்வளவு தூரம் வர்றதே பெரிய விஷயம். தல
தோனி ஏதாவது magic பண்ணுனா உண்டு. கப் ஜெயிச்சா சந்தோஷம் தான், ஆனா வாய்ப்புகள்
“வளரே குறவாணு”.
2. RCB
மல்லையா மாமா ஒரு கடனாளியா இருந்தாலும் , டீமை “கும்”னு கும்கி யானை
மாதிரி எடுத்து வச்சுருக்கார். கொஹ்லி, டி வில்லியர்ஸ், கெய்ல், தியாகி யுவராஜ்சிங்
இப்படி எல்லாருமே பெரும் தலைங்க தான். யாராவது ஒருத்தர் அடிச்சாலும் மேட்ச் வின்
பண்ணிடலாம்.
1. Punjab
வழக்கமா அஞ்சாவது இல்ல ஆறாவது
வர்ற டீம், இந்த முறை, கட்டம் சரியா இருக்குறதால, கப் அடிக்க நல்ல சான்ஸ் இருக்கு.
சிக்ஸ் மட்டுமே அடிப்பேன் என்று அடம் பிடிக்கும் மில்லர், மேக்ஸ்வெல். 20 ரன்
அடிச்சாலும் , கமல் கிஸ் மாதிரி சும்மா நச் னு அடிக்கிற சேவாக், மூஞ்சிய சிரிச்ச
மாதிரி வச்சிருக்கிற பெய்லி அப்படினு ஒரு கூட்டமே இருக்கு. பௌலிங்க் கொஞ்சம் மோசம்
தான், இருந்தாலும் இவுங்க தான் ஜெயிப்பாங்கனு பட்சி சொல்லுதே!!
No comments:
Post a Comment